விளையாட்டு துளிகள்: தொடரை வென்றது ஆஸ்திரேலியா

மே.இ.தீவுகளின் ஒடியன் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்கிறார் ஆஸி.யின் மிட்செல் ஸ்டார்க்.
மே.இ.தீவுகளின் ஒடியன் ஸ்மித்தை ஆட்டமிழக்கச் செய்கிறார் ஆஸி.யின் மிட்செல் ஸ்டார்க்.
Updated on
1 min read

தொடரை வென்றது ஆஸ்திரேலியா:

பிரிஸ்பனில் நடைபெற்ற 2-வது டி 20 கிரிக்கெட் இந்த ஆட்டத்தில் 179 ரன்கள் இலக்கை விரட்டிய மே.இ.தீவுகள் 147 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூலம் தொடரை 2-0 வென்றது ஆஸி.

வெற்றியுடன் தொடங்கியது கேரளா:

ஐஎஸ்எல் கால்பந்து தொடர் கொச்சியில் நேற்று தொடங்கியது. இதில் ஈஸ்ட் பெங்கால் டிபன்டர் சுமீத் பாஸ்ஸிக்கு பிடிகொடுக்காமல் பந்தை கடத்த முயற்சி செய்கிறார் கேரள அணியின் சாஹல் அப்துல் சமத். இந்த ஆட்டத்தில் கேரளா 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ரிஸ்வான் 78 ரன்கள்:

கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றுவரும் முத்தரப்பு டி20 தொடரில் வங்கதேசத்துக்கு எதிராக பாகிஸ்தான் முகமது ரிஸ்வான் 50 பந்துகளில் 78 ரன்கள் விளாசினார். இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in