

சீனாவின் புஸ்ஹொவ் நகரில் தாய்ஹாட் சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பிரிமியர் பாட்மிண்டன் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் இந்திய நட்சத்திர வீராங் கனைகளான பி.வி.சிந்து, சாய்னா நெவால் களமிறங்குகின்றனர்.
முழங்கால் அறுவை சிகிச்சை முடிந்து 3 மாதகாலத்துக்கு பிறகு சாய்னா களமிறங்கும் முதல் தொடர் இதுவாகும். இதனால் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. சீன ஓபனில் சாய்னா கடந்த இரு வருடங்களுக்கு முன் பட்டம் வென்றிருந்தார்.