Published : 07 Oct 2022 06:18 AM
Last Updated : 07 Oct 2022 06:18 AM

மகளிர் ஆசிய கோப்பை டி 20 | இந்தியா – பாகிஸ்தான் இன்று மோதல்

சைல்ஹெட்: மகளிர் ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 1 மணி அளவில் நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

மகளிர் ஆசிய கோப்பை டி 20 கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தின் சைல்ஹட் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று பிற்பகல் 1 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா தொடர்ச்சியாக 3 வெற்றிகளை பெற்ற நிலையில் பாகிஸ்தானை சந்திக்கிறது. அதேவேளையில் பாகிஸ்தான் அணி தாய்லாந்திடம் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நிலையில் இன்றைய ஆட்டத்தை எதிர்கொள்கிறது.

புள்ளிகள் பட்டியலில் இந்தியா 3 ஆட்டங்களில் விளையாடி 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில் பாகிஸ்தான் 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. இரு அணிகளும் நேருக்கு நேர் மோதிய கடைசி 5 ஆட்டங்களிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. இந்த ஆதிக்கத்தை இன்றைய ஆட்டத்திலும் இந்திய மகளிர் அணி தொடர முயற்சி செய்யக்கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x