Published : 07 Oct 2022 06:29 AM
Last Updated : 07 Oct 2022 06:29 AM

36-வது தேசிய விளையாட்டு போட்டி - கூடைப்பந்தில் தமிழகத்துக்கு தங்கம்

அமகதாபாத்: 36-வது தேசிய விளையாட்டு போட்டி குஜராத்தில் உள்ள 6 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆடவருக்கான கூடைப்பந்து (5x5) போட்டியில் தமிழக அணி தங்கப் பதக்கம் வென்றது. இறுதிப் போட்டியில் தமிழக ஆடவர் அணி 97-89 என்ற புள்ளிகள் கணக்கில் பஞ்சாப் அணியை வென்றது. அதேவேளையில் மகளிர் பிரிவில் தமிழக அணி வெள்ளிப் பதக்கம் வென்றது. இறுதிப் போட்டியில் தமிழக மகளிர் அணியானது 62-67 என்ற புள்ளிகள் கணக்கில் தெலங்கானா அணியிடம் தோல்வியடைந்தது.

வில்வித்தையில் ஆடவருக்கான ரீகர்வ் பிரிவில் மேற்கு வங்கத்தின் அட்டானுதாஸ் 6-4 என்ற கணக்கில் சர்வீசஸ் அணியைச் சேர்ந்த குர்சரண் பெஸ்ராவை வீழ்த்தி தங்கம் வென்றார். மகளிர் பிரிவில் ஹரியாணாவின் சங்கீதா 6-2 என்ற கணக்கில் அன்ஷிகா குமாரி சிங்கை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

பாட்மிண்டனில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் தெலங்கானாவின் சாய் பிரணீத் 21-11, 21-12 என்ற நேர் செட்டில் கர்நாடகாவின் மிதுன் மஞ்சுநாத்தை தோற்கடித்து தங்கம் வென்றார். இரட்டையர் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஹரிகரண் அம்சகருணன், ருபன் குமார் ஜோடி 19-21, 9-21 என்ற நேர்செட்டில் கேரளாவின் ரவி கிருஷ்ணா, உதயகுமார் சங்கர் பிரசாத் ஜோடியிடம் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கம் பெற்றது.

மகளிர் ஒற்றையர் பிரிவில் சத்தீஷ்கரின் அகார்ஷி காஷ்யப் 21-8, 22-20 என்ற செட் கணக்கில் மகாராஷ்டிராவின் மாளவிகாவை தோற்கடித்து தங்கம் வென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x