யு-17 உலகக் கோப்பை கால்பந்து இந்திய மகளிர் அணி அறிவிப்பு

யு-17 உலகக் கோப்பை கால்பந்து இந்திய மகளிர் அணி அறிவிப்பு
Updated on
1 min read

புவனேஷ்வர்: 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபிபா மகளிர் உலகக் கோப்பை கால்பந்து தொடர் வரும் 11-ம் தேதி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் தொடங்குகிறது. வரும் 30-ம் தேதி வரை நடைபெறும் இந்தத் தொடரின் ஆட்டங்கள் புவனேஷ்வர், கோவா, நவி மும்பை ஆகிய பகுதிகளில் நடைபெறுகிறது. இந்தத் தொடரில் போட்டியை நடத்தும் இந்தியா ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் அமெரிக்கா, மொராக்கோ, பிரேசில் அணிகளும் உள்ளன.

இந்திய மகளிர் அணி தனதுமுதல் லீக் ஆட்டத்தில் 11-ம் தேதிஅமெரிக்காவுடன் மோதுகிறது. தொடர்ந்து 14-ம் தேதி மொராக்கோவுடனும், 17-ம் தேதி பிரேசிலுடனும் இந்திய அணி மோத உள்ளது.இந்நிலையில் இந்தத் தொடருக்கான 21 பேர் கொண்ட இந்திய மகளிர் அணியை பயிற்சியாளர் தாமஸ்டென்னர்பி நேற்று அறிவித்தார்.

அணி விவரம்:

கோல்கீப்பர்கள்: மோனாலிஷா தேவி மொய்ராங்தெம், மெலடி சானு கெய்ஷாம், அஞ்சலி முண்டா.

டிபன்டர்கள்: அஸ்தம் ஓரான், காஜல், நகேதா, பூர்ணிமா குமாரி, வர்ஷிகா, ஷில்கி தேவி ஹேமம்.

நடுகளம்: பாபினா தேவி லிஷாம், நிது லிண்டா, ஷைல்ஜா, சுபாங்கி சிங்.

முன்களம்: அனிதா குமாரி, லிண்டாகோம் செர்டோ, நேஹா, ரெஜியா தேவி லைஷ்ராம், ஷெலியா தேவி லோக்டோங்பாம், கஜோல் ஹூபர்ட் டிசோசா, லாவண்யா உபாத்யாய், சுதா அங்கிதா திர்கி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in