

மும்பை: இரானி கோப்பைக் கிரிக்கெட் போட்டிக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஹனுமா விஹாரி கேப்டனாக நியமிக்கப் பட்டுள்ளார். தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோரும் அணியில் இடம் பெற்றுள்ளார்.
ராஜ்கோட்டில் வரும் அக்டோபர் 1 முதல் 5-ம் தேதி வரை நடைபெறவுள்ள இரானி கோப்பைக்கான போட்டியில் ரெஸ்ட் ஆஃப் இந்தியா - ரஞ்சி சாம்பியன் சவுராஷ்டிரா அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டத்துக்கான ரெஸ்ட் ஆஃப் இந்தியா அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
ஹனுமா விஹாரி தலைமையிலான அணியில் மயங்க் அகர்வால், யஷஸ்வி ஜெய்ஸ்வால், யாஷ் துல், உம்ரான் மாலிக் இடம்பெற்றுள்ளனர். கரோனா தொற்று காரணமாக இந்த போட்டி 2 வருடங்களுக்குப் பிறகு தற்போதுதான் நடத்தப்பட உள்ளது.
அணி விவரம்: ஹனுமா விஹாரி (கேப்டன்), அபிமன்யு ஈஸ்வரன், பிரியங்க் பன்சால், மயங்க் அகர்வால், சர்ஃப்ராஸ் கான், யஷஸ்வி ஜெய்ஸ்வால், யாஷ் துல், கே.எஸ். பரத், உபேந்திர யாதவ், குல்தீப் சென், உம்ரன் மாலிக், முகேஷ் குமார், சாய் கிஷோர், அர்ஸன் நக்வஸ்வாலா, ஜெயந்த் யாதவ், சவுரப் குமார்.