IND A vs NZ A | சஞ்சு சாம்சன் அரை சதம் பதிவு: தொடரை 3-0 என வென்றது இந்தியா

சஞ்சு சாம்சன்.
சஞ்சு சாம்சன்.
Updated on
1 min read

சென்னை: இந்திய-ஏ அணி நியூஸிலாந்து-ஏ அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றுள்ளது. சஞ்சு சாம்சன் மூன்றாவது போட்டியில் அரை சதம் பதிவு செய்திருந்தார்.

நியூஸிலாந்து-ஏ அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடியது. இதில் ஒருநாள் தொடர் முழுவதும் சென்னை - சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த தொடரில் இந்திய-ஏ அணியை சஞ்சு சாம்சன் கேப்டனாக வழிநடத்தி இருந்தார்.

இன்று நடைபெற்ற மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து 284 ரன்கள் எடுத்தது. கேப்டன் சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா 99 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். திலக் வர்மா, 50 ரன்கள் எடுத்து அவுட்டானார். சாம்சன் 54 ரன்களிலும், ஷர்துல் தாக்கூர் 51 ரன்களும் எடுத்து அவுட்டாகி இருந்தனர்.

285 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நியூஸிலாந்து அணி விரட்டியது. ஆனால் வெறும் 178 ரன்கள் மட்டுமே எடுத்து அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதன் மூலம் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரையும் 3-0 என கைப்பற்றியது. முதல் போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் இந்தியா வென்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in