

கோவையில் இன்று தொடங்கும் தேசிய ஜூனியர் தடகளப் போட்டி யில் சாம்பியன்ஷிப் பட்டத்தைக் கைப்பற்ற தமிழக அணி தீவிர முனைப்புடன் உள்ளது.
தமிழ்நாடு தடகளச் சங்கம் சார்பில் 32-வது தேசிய ஜூனியர் தடகளப் போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் இன்று (நவ.10) தொடங்குகின்றன. வரும் 14-ம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியில் 28 மாவட்டங் களைச் சேர்ந்த 1,800 வீரர்கள், 900 வீராங்கனைகள் என 2,700 பேர் பங்கேற்கின்றனர். இதில், 14, 16, 18, 20 வயதுக்கு உட்பட்டோர் என 4 பிரிவுகளில் வீரர், வீராங்கனை களுக்கு இடையே, ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட 103 விளையாட்டுகள் நடைபெற உள்ளன.
தமிழக அணி 4 முறை சாம்பியன் ஷிப் பட்டத்தைக் கைப்பற்றியுள் ளது. கடந்த முறை நடைபெற்ற போட்டியில் கேரள மாநிலம் முதலிடத்தையும், தமிழக அணி 2-ம் இடத்தையும் வென்றது.
தற்போது தமிழக அணி பலம் வாய்ந்த அணியாக உருவெடுத்துள் ளது. 101 வீரர்கள், 88 வீராங்கனை களுடன் களமிறங்கும் தமிழக அணி 100, 200, 400 மீட்டர் ஓட்டங்கள், தடை தாண்டுதல் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், மும்முறை தாண்டுதல், கம்பு ஊன்றி தாண்டுதல் உள்ளிட்டவற்றில் சிறந்த வீரர்களைக் கொண்டுள்ளது. சென்னை விளையாட்டு விடுதி யைச் சேர்ந்த வி.சுபா, கே.பிரியா ஆகியோர் போலந்தில் நடைபெற்ற உலக ஜூனியர் தடளப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றனர். மாணவி ரோச்சல் ஆசிய இளையோர் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். கோவையைச் சேர்ந்த வீரர் மித்ர வருண் சீனாவில் நடைபெற்ற இளையோர் ஒலிம்பிக் போட்டியில் வட்டு எறிதலில் 5-ம் இடம் பிடித்தார்.
தமிழ்நாடு தடகளச் சங்க மாநிலப் பொருளாளர் சி.லதா ‘தி இந்து’விடம் கூறியதாவது: கடந்த முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லப் போராடி, 2-ம் இடம் பிடித்தோம். இந்த முறை தமிழக அணி பலம் வாய்ந்த அணியாகத் திகழ்கிறது. தேசிய, சர்வதேச அளவில் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகள் இம்முறை களத்தில் உள்ளனர். இதற்காக ஒரு வாரம் சிறப்புப் பயிற்சி முகாம் நடத்தி, அனைத்துப் போட்டிகளிலும் பதக்கம் வெல்லும் அளவுக்கு வீரர், வீராங்கனைகளை தயார் செய்துள்ளோம்” என்றார்.
பணமின்றி தவித்த வீரர்கள்
போட்டியில் பங்கேற்பதற்காக பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்துள்ள வீரர், வீராங்கனைகள் மற்றும் பயிற்சியாளர்கள், செலவுக் காக ரூ.500, ரூ.1,000 நோட்டுகளைக் கொண்டு வந்துள்ளனர். திடீரென அவை செல்லாது என்று அறிவிக் கப்பட்டதால் அவர்கள் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.