ஜூலியர் பேர் கோப்பை - அர்ஜூன் எரிகைசியை வென்று சாம்பியன் ஆனார் கார்ல்சன்

ஜூலியர் பேர் கோப்பை - அர்ஜூன் எரிகைசியை வென்று சாம்பியன் ஆனார் கார்ல்சன்
Updated on
1 min read

நியூயார்க்: ஜூலியர் பேர் கோப்பைக்கான செஸ் தொடரின் இறுதி ஆட்டத்தில் உலக சாம்பியனான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன், இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜூன் எரிகைசியை வீழ்த்தி பட்டம் வென்றார்.

இணையதளம் வாயிலாக நடைபெற்ற இந்தத் தொடரின் இறுதி ஆட்டங்கள் இரு நாட்கள் நடைபெற்றன. முதல் நாள் ஆட்டத்தில் அர்ஜூன் எரிகைசி 0.5-2.5 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்திருந்தார். இந்நிலையில் நேற்று 2-வது நாள் ஆட்டம் நடைபெற்றது. இதில் ஒரு ஆட்டத்தை டிராவில் முடித்தாலே கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்று விடலாம் என்ற சூழ்நிலையே இருந்தது.

எனினும் தொடர்ச்சியாக இரு ஆட்டங்களை வென்று அசத்தினார் கார்ல்சன். முதல் ஆட்டத்தில் 48-வது நகர்த்தலின் போதும், 2-வது ஆட்டத்தில் 52-வது நகர்த்தலின் போது அர்ஜூன் எரிகைசியை வீழ்த்தினார் கார்ல்சன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in