ராகுல் திராவிடை முந்தி கோலி புதிய சாதனை!

விராட் கோலி.
விராட் கோலி.
Updated on
1 min read

ஹைதராபாத்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ராகுல் திராவிடை முந்தி புதிய சாதனை படைத்துள்ளார் அது என்ன என்பதை பார்ப்போம். இது சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி வீரர்கள் சார்பில் படைக்கப்பட்டுள்ள ஆல் டைம் ரெக்கார்டுகளில் அடங்கும்.

இந்திய அணிக்காக 102 டெஸ்ட், 262 ஒருநாள் மற்றும் 107 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் கோலி. அதன் மூலம் மொத்தம் 24,078 ரன்கள் எடுத்துள்ளார். 71 சதம் மற்றும் 125 அரை சதங்களை அவர் பதிவு செய்துள்ளார். மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரராகவும் போற்றப்பட்டு வருகிறார். அவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியும் சாதனை தடங்களாக அவருக்கு அமைந்துள்ளன.

இந்நிலையில், ஹைதராபாத் நகரில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் கோலி, 48 பந்துகளில் 63 ரன்கள் எடுத்திருந்தார். அதன் மூலம் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ள திராவிட், சர்வதேச கிரிக்கெட்டில் எடுத்த ரன்களை காட்டிலும் கூடுதலாக 14 ரன்கள் எடுத்துள்ளார் கோலி. திராவிட் மொத்தம் 404 போட்டிகளில் விளையாடி 24,064 ரன்கள் எடுத்துள்ளார்.

இந்திய அணிக்காக அதிக ரன்கள் எடுத்துள்ள வீரர்கள்...

  • சச்சின் டெண்டுல்கர் - 34,357 ரன்கள் - 664 போட்டிகள்
  • விராட் கோலி - 24,078 ரன்கள் - 471 போட்டிகள்
  • ராகுல் திராவிட் - 24,064 ரன்கள் - 404 போட்டிகள்
  • கங்குலி - 18,433 ரன்கள் - 421 போட்டிகள்
  • எம்.எஸ்.தோனி - 17,092 ரன்கள் - 535 போட்டிகள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in