ஒரே ஃப்ரேமில் 66 கிராண்ட் ஸ்லாம்: ரோஜர் ஃபெடரர் பகிர்ந்த புகைப்படம்

நடால், ஆண்டி முர்ரே, ஜோகோவிச் மற்றும் ஃபெடரர்.
நடால், ஆண்டி முர்ரே, ஜோகோவிச் மற்றும் ஃபெடரர்.
Updated on
1 min read

லண்டன்: 66 கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் ஒரே புகைப்படத்தில் சங்கமித்து நிற்கும் புகைப்படம் ஒன்றை சுவிட்சர்லாந்து நாட்டு டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் பகிர்ந்துள்ளார். அதாவது அந்தப் புகைப்படத்தல் நடால், ஆண்டி முர்ரே, ஜோகோவிச் மற்றும் ஃபெடரர் ஆகியோர் உள்ளனர். அவர்கள் நால்வரும் கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஒற்றையர் பிரிவில் வென்றுள்ள சாம்பியன் பட்டங்கள் எண்ணிக்கை தான் 66.

41 வயதான ஃபெடரர் வரும் ஞாயிற்றுக்கிழமையுடன் சர்வதேச டென்னிஸ் களத்திலிருந்து விடை பெறுகிறார். அண்மையில் அது குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டிருந்தார். பிரிட்டனில் நடைபெறும் லேவர் கோப்பை தொடர் தான் தனது கடைசி தொடர் என தெரிவித்திருந்தார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்து செய்திகளின் மூலம் பிரியாவிடை கொடுத்திருந்தனர்.

இந்நிலையில் நடால், ஆண்டி முர்ரே, ஜோகோவிச் மற்றும் ஃபெடரர் என மாடர்ன் டே டென்னிஸ் விளையாட்டின் மகத்தான நான்கு வீரர்களும் ஐரோப்பா அணிக்காக நடப்பு லேவர் கோப்பை தொடரில் பங்கேற்று விளையாடுகின்றனர். இதில் நடால் மற்றும் ஃபெடரர் இரட்டையர் பிரிவில் கலந்து விளையாடுகின்றனர்.

இது ஃபெடரரின் கடைசி தொடராக அமைந்துள்ள நிலையில் நால்வரும் இரவு உணவுக்கு சென்றுள்ளனர். அப்போது ஃபெடரர் தனது செல்போனில் எடுத்த செல்ஃபி புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இப்போது அதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

நடால் (22 பட்டங்களும்), ஜோகோவிச் (21 பட்டங்களும்), ஃபெடரர் (20 பட்டங்களும்), முர்ரே (3 பட்டங்களும்) கிராண்ட் ஸ்லாம் தொடர்களின் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in