IND vs AUS | மீம் கன்டென்ட் ஆன விராட் கோலியின் ரியாக்‌ஷன்!

விராட் கோலி.
விராட் கோலி.
Updated on
1 min read

மொகாலி: இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஃபீல்ட் செய்தபோது அவரது ரியாக்‌ஷன் ஒன்று பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தது. அது இப்போது மீம் கன்டென்ட் ஆகவும் மாறியுள்ளது.

தேனீயை போல களத்தில் எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பார் விராட் கோலி. அது பேட்டிங், ஃபீல்டிங் என எதுவானாலும் சரி. அவர் அபாரமான ஃபீல்டரும் கூட. நேற்றைய போட்டியில் கூட ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன் கேமரூன் க்ரீன் கொடுத்த கேட்ச் வாய்ப்பு ஒன்றை கணகச்சிதமாக பிடித்து அசத்தியிருந்தார். அந்த பந்து பல மீட்டர் தூரம் மேலே சென்றிருந்தது. ஆனாலும் அதனை விழிப்புடன் பிடித்திருந்தார் விராட்.

இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது. இந்தியா சார்பில் ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை உமேஷ் யாதவ் வீசி இருந்தார். அந்த ஓவரின் முதல் 4 பந்துகளில் 4 பவுண்டரியை விளாசி இருந்தார் கேமரூன் க்ரீன். அதைப் பார்த்து மலைத்து நின்ற விராட் கோலி ஒருவிதமான ரியாக்‌ஷன் கொடுத்திருந்தார். அது கேமரா கண்களிலும் பட, கணநேரத்தில் அப்படியே படம் பிடிக்கப்பட்டது. இப்போது அது தான் பார்வையாளர்கள் மத்தியில் பேசு பொருளாகி உள்ளது.

இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்ன? மொகாலி ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமானது. அதனால் டாஸ் வென்றதும் ஆஸ்திரேலிய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணி 208 ரன்கள் குவித்திருந்தது. இருந்தாலும் பவுலிங் யூனிட் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்கவில்லை. தொடக்கம் முதலே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ரன் குவிப்பதில் குறியாக இருந்தனர். க்ரீன் மற்றும் மேத்யூ வேட் ஆகியோர் அபாரமாக விளையாடி இருந்தனர். இந்திய அணி இந்த போட்டியை இழக்க காரணம் கேட்ச்களை தவறவிட்டது தான். அக்சர் மற்றும் ராகுல் என இருவரும் தங்களுக்கு வந்த கேட்ச் வாய்ப்பை நழுவவிட்டனர். 18-வது ஓவரில் ஹர்ஷல் படேல், கடினமான வாய்ப்பு ஒன்றை டிராப் செய்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in