Published : 21 Sep 2022 05:46 AM
Last Updated : 21 Sep 2022 05:46 AM
துபாய்: இங்கிலாந்துக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்ற மகளிர் டி 20 கிரிக்கெட் தொடரில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா 3 ஆட்டங்களில் விளையாடி 111 ரன்கள் சேர்த்தார். இதன் மூலம் தரவரிசை பட்டியலில் 2 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். அதேவேளையில் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை பட்டியலில் மந்தனா 3 இடங்கள் முன்னேறி 7-வது இடத்தை அடைந்துள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் மந்தனா 91 ரன்கள் விளாசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணியின் கேப்டன் ஹர்மான்பிரீத் கவுர் 4 இடங்கள் முன்னேறி 9-வது இடத்தை பிடித்துள்ளார். ஆல்ரவுண்டரான தீப்தி சர்மா ஒரு இடம் முன்னேறி 32-வது இடம் பெற்றுள்ளார். விக்கெட் கீப்பரான யாஷ்டிகா பாட்டியா 8 இடங்கள் முன்னேறி 37-வது இடத்தை எட்டியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT