

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் நேற்று டெல்லி நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி டைனமோஸ் - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதுவும் அடிக்கப்படவில்லை.
56-வது நிமிடத்தில் டெல்லி அணி முதல் கோலை அடித்தது. அந்த அணியின் லீவிஸ் இந்த கோலை அடித்தார். அடுத்த 4 நிமிடத்தில் பெரிரா 2-வது கோலை அடிக்க டெல்லி அணி 2-0 என முன்னிலை பெற்றது.
கேரளா அணியால் கடைசி வரை போராடியும் கோல் அடிக்க முடியவில்லை. முடிவில் டெல்லி அணி 2-0 என வெற்றி பெற்றது. 3-வது வெற்றியை பதிவு செய்த அந்த அணி 13 புள்ளிகளுடன் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.
தொடரில் இன்று இரவு 7 மணிக்கு குவாஹாட்டியில் நடை பெறும் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெடு - மும்பை சிட்டி எப்சி அணிகள் மோது கின்றன.