IND vs AUS முதல் டி20 | ஹர்திக் அதிரடி: 208 ரன்கள் குவித்தது இந்தியா!

பந்தை பவுண்டரிக்கு பறக்க விடும் ஹர்திக்.
பந்தை பவுண்டரிக்கு பறக்க விடும் ஹர்திக்.
Updated on
1 min read

மொகாலி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 208 ரன்கள் குவித்துள்ளது. கே.எல்.ராகுல், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா போன்ற வீரர்கள் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தனர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ள நிலையில் இரு அணிகளுக்கும் இந்த தொடர் சிறப்பானதொரு பயிற்சியாக அமைந்துள்ளது.

இந்த தொடரின் முதல் ஆட்டம் மொகாலியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதனால் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் இந்தியாவுக்காக ஆட்டத்தை தொடங்கினர். ரோகித், 11 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து வந்த கோலி 2 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்த ராகுல் மற்றும் சூர்யகுமார் யாதவும் 68 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ராகுல் 55 ரன்கள் எடுத்து அவுட்டானார். தொடர்ந்து களத்திற்கு பாண்டியா வந்தார். சூர்யகுமார் யாதவ், 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். அக்சர் படேல் மற்றும் தினேஷ் கார்த்திக் தலா 6 ரன்கள் எடுத்து வெளியேறினர்.

ஆஸ்திரேலிய அணி சார்பில் நாதன் எல்லிஸ் 3, ஹேசல்வுட் 2 மற்றும் கேமரூன் கிரீன் 1 விக்கெட்டும் கைப்பற்றி இருந்தனர். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. ஹர்திக், 30 பந்துகளில் 71 ரன்கள் எடுத்திருந்தார். 7 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் இதில் அடங்கும். கடைசி ஓவரின் கடைசி 3 பந்துகளில் சிக்ஸர் விளாசினார் ஹர்திக். ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in