இளம் கிரிக்கெட் வீரர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்ட மேக்ஸ்வெல்: பிக் ஷோவின் உன்னத செயல்

இளம் வீரர்களுடன் செல்ஃபி எடுக்கும் மேக்ஸ்வெல்.
இளம் வீரர்களுடன் செல்ஃபி எடுக்கும் மேக்ஸ்வெல்.
Updated on
1 min read

மொகாலி: இளம் வீரர்களுடன் குஷியாக செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆல்-ரவுண்டரான கிளென் மேக்ஸ்வெல். அவர் ஐபிஎல் கிரிக்கெட்டில் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி நாளை மொகாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற உள்ளது. அதற்காக இரு அணி வீரர்களும் அங்கு முகாமிட்டு, பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

அடுத்த மாதம் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், இரு அணிகளுக்கும் சிறப்பானதொரு பயிற்சியாக இந்தத் தொடர் அமைந்துள்ளது. இந்தச் சூழலில் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட ஆஸ்திரேலிய அணியின் மேக்ஸ்வெல், இளம் பஞ்சாப் கிரிக்கெட் வீரர்களுடன் கூடி பேசி மகிழ்ந்துள்ளார். அதோடு அவர்களுடன் செல்ஃபியும் எடுத்துக் கொண்டுள்ளார்.

அவரை ரசிகர்கள் பிக் ஷோ என அழைப்பது வழக்கம். ஆஸ்திரேலிய அணிக்காக 14 டெஸ்ட், 127 ஒருநாள் மற்றும் 87 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 2017 ரன்கள் எடுத்துள்ளார். 36 விக்கெட்டுகளையும் அவர் கைப்பற்றியுள்ளார். வழக்கத்திற்கு மாறாக ஸ்விட்ச்-ஹிட் முறையில் கிரிக்கெட் பந்தை அணுகுவார் இவர். அதனால் இவருக்கு பந்து வீசுவதும், ஃபீல்டிங் செட் செய்வதும் சற்று கடினம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in