Published : 19 Sep 2022 04:35 AM
Last Updated : 19 Sep 2022 04:35 AM
புதுடெல்லி: கரோனா வைரஸ் தொற்று காரணமாக ஆஸ்திரேலியாவுடன் நடைபெறவுள்ள சர்வதேச டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய அணி வீரர் மொகமது ஷமி விலகியுள்ளார்.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தத் தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 20-ம் தேதி மொஹாலியில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் மொகமது ஷமிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் மொகமது ஷமி விளையாட மாட்டார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது.
இதையடுத்து, ஷமிக்கு பதிலாக உமேஷ் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார் என்றும் பிசிசிஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து மொகமது ஷமி விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT