Last Updated : 19 Sep, 2022 04:42 AM

 

Published : 19 Sep 2022 04:42 AM
Last Updated : 19 Sep 2022 04:42 AM

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் | செக். குடியரசு வீராங்கனை லிண்டா சாம்பியன்

லிண்டாவுக்கு கோப்பையை வழங்குகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

சென்னை: சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் பிரிவில் செக். குடியரசு வீராங்கனை லிண்டா ஃப்ருஹ்விர்டோவா சாம்பியன் பட்டம் வென்றார்.

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் கடந்த 12-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் போலந்து வீராங்கனை மக்டாலினெட்டும், செக். குடியரசு வீராங்கனை லிண்டா ஃப்ருஹ்விர்டோவாவும் மோதினர். இதில் லிண்டா ஃப்ருஹ்விரடோவா 4-6, 6-3, 6-4 என்ற செட் கணக்கில் மக்டா லினெட்டை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இரட்டையர் பிரிவு

இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் கனடாவின் கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கி - பிரேசிலின் லூயிசா ஸ்டெபானி ஜோடி 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ரஷ்யாவின் அன்னா லின்கோவா- ஜார்ஜியாவின் நடிலா ஜலாமிட்ஸ் ஜோடியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது.

மொத்தம் 58 நிமிடங்களிலேயே இந்த போட்டி முடிவுக்கு வந்தது. முன்னதாக போட்டியை பார்வையாளர்கள் மாடத்தில் அமர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டுகளித்தார்.

பரிசளிப்பு விழாவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ. வீ.மெய்யநாதன், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், மக்களவை உறுப்பினர்கள் கனிமொழி, ஆ.ராசா, தயாநிதி மாறன், விளையாட்டுத்துறை செயலர் அபூர்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை ரூ. 2 கோடியாகும். இதில்ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற லிண்டாவுக்கு சுமார் ரூ.26.50லட்சமும், 2-வது இடம் பிடித்த மக்டா லினெட்டுக்கு சுமார் ரூ.15.77 லட்சமும் வழங்கப்பட்டது.

இதேபோல், இரட்டையர் பிரிவில் முதலிடம் பிடித்த ஜோடிக்கு சுமார் ரூ.9.58 லட்சமும், 2-ம் இடம் பிடித்த ஜோடிக்கு சுமார் ரூ.5.35 லட்சமும் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x