

காமன்வெல்த் துப்பாக்கி சுடுதல் போட்டியின் மகளிர் டபுள் டிராப் பிரிவில் இந்தியாவின் ஸ்ரேயாஸி சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற இந்தப் போட்டியில் ஸ்ரேயாஸி 92 புள்ளிகளுடன் வெள்ளியை வென்றார். இதேபிரிவில் இங்கிலாந்தின் சார்லோட்டே கெர்வூட் தங்கமும், மற்றொரு இங்கிலாந்து வீராங்கனை ரஹேல் பாரிஸ் வெண்கலமும் வென்றனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் ஆரம்பத்தில் பெரிய அளவில் சோபிக்காத ஸ்ரேயாஸி கடைசி சுற்றுக்கு முந்தைய சுற்று வரை 3-வது இடத்திலேயே இருந்தார். எனினும் கடைசி சுற்றில் சரிவிலிருந்து மீண்ட ஸ்ரேயாஸி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். இதேபிரிவில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீராங்கனை வர்ஷா வர்மா 88 புள்ளிகளுடன் 5-வது இடத்தைப் பிடித்தார்.