Published : 16 Sep 2022 07:07 PM
Last Updated : 16 Sep 2022 07:07 PM

T20 WC | இலங்கை அணி அறிவிப்பு; முதல் சுற்றில் விளையாடும் ஆசிய சாம்பியன்

இலங்கை அணி.

கொழும்பு: எதிர்வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணி இந்தத் தொடரின் முதல் சுற்றின் குரூப் ஆட்டத்தில் விளையாடி முதல் இரண்டு இடங்களை பிடித்தால் மட்டுமே அடுத்தs சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற சூழல் உள்ளது. அண்மையில் நடைபெற்ற ஆசிய கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது இலங்கை அணி என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவில் வரும் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரையில் டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெற உள்ளது. மொத்தம் 16 அணிகள் இதில் பங்கேற்று விளையாட உள்ளன. முதல் சுற்று, சூப்பர் 12, அரையிறுதி, இறுதி என இந்த தொடர் நடக்க உள்ளது. மொத்தம் 45 போட்டிகள்.

கடந்த 2021 டி20 உலகக் கோப்பையில் ஒன்பது முதல் பன்னிரண்டாவது இடம் வரை பிடித்த 4 அணிகளில் ஒன்றான இலங்கை அணி முதல் சுற்றில் விளையாடுகிறது. ஆசிய சாம்பியனான இலங்கை அணி குரூப் பிரிவில் விளையாடும் நிலையில் உள்ளது. கடந்த முறை டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடிய அந்த அணியின் செயல்பாடு தான் இதற்கு காரணம்.

இலங்கை அணி விவரம்: தசுன் ஷனகா (கேப்டன்), தனுஷ்கா குணதிலகா, பதும் நிஸ்ஸங்கா, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, பனுகா ராஜபக்சே, தனஞ்ஜெய டி சில்வா, வனிந்து ஹசரங்கா, மஹீஷ் தீக்ஷனா, ஜெப்ரி, சமிகா கருணாரத்னே, துஷ்மந்த சமீரா, லஹிரு குமாரா, தில்ஷன் மதுஷங்கா, பிரமோத் மதுஷன். இதில் சமீரா மற்றும் லஹிரு குமாரா உடற்திறன் இலங்கை அணிக்கு சோதனையாக அமைந்துள்ளது.

ரிசர்வ் வீரர்கள்: அசேன் பண்டாரா, பிரவீன் ஜெயவிக்ரமா, தினேஷ் சண்டிமால், பெர்னாண்டோ, நுவனிடு பெர்னாண்டோ.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x