

சேலம்: துலீப் டிராபி அரை இறுதி ஆட்டத்தில் வடக்கு மண்டல அணிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் விளாசினார் தென் மண்டல அணி வீரர் ஹனுமா விகாரி.
சேலத்தில் நேற்று தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் மண்டல அணி முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 90 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 324 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான ரோஹன் குன்னும்மாள் 225 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 16 பவுண்டரிகளுடன் 143 ரன்கள் குவித்து சைனி பந்தில் ஆட்டமிழந்தார். மயங்க் அகர்வால் 49 ரன்களில் நிஷாந்த் சிந்து பந்தில் போல்டானார்.
2-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹனுமா விகாரி 220 பந்துகளில், ஒரு சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 107 ரன்கள் விளாசி ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு உறுதுணையாக விளையாடிய பாபா இந்திரஜித் 20 ரன்களுடன் களத்தில் உள்ளார்.