Published : 19 Nov 2016 07:18 PM
Last Updated : 19 Nov 2016 07:18 PM

சீன ஓபன் பாட்மிண்டன் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து

சீன ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதி சுற்றுக்கு இந்தியாவின் பி.வி.சிந்து முன்னேறினார்.

சீனாவின் புஸ்ஹொவ் நகரில் நடைபெற்று வரும் இந்த தொடரில் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற 7-ம் நிலை வீராங்கனையான சிந்து அரை இறுதியில் 6-ம் நிலை வீராங்கனையான தென் கொரியாவின் சுங் ஜி ஹியுனை எதிர்த்து விளையாடினார்.

இதில் முதல் செட்டை 11-21 என சிந்து இழந்தார். எனினும் 2-வது செட்டில் கடும் நெருக்கடி கொடுத்து 23-21 என கைப்பற்றினார். இதனால் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட் பரபரப்பானது.

இந்த செட்டை சிந்து 21-19 என கைப்பற்றினார். முடிவில் அவர் 11-21, 23-21, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் 8-ம் நிலை வீராங்கனையான சீனாவின் சன் யுவை எதிர்த்து விளையாடுகிறார் சிந்து.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x