

டாக்கா: ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் 16-ம் தேதி தொடங்க உள்ள டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மூத்த வீரரும், முன்னாள் கேப்டனுமான மஹ்மதுல்லா ரியாத் நீக்கப்பட்டுள்ளார். 15 பேர் கொண்ட அணிக்கு ஷகிப் அல் ஹசன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அணி விவரம்: ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), சபீர் ரஹ்மான், மெஹிதி ஹசன், அபிஃப் ஹொசைன், மொசாடெக் ஹொசைன், லிட்டன் தாஸ், யாசிர் அலி, நூருல் ஹசன், முஸ்டாபிஸூர் ரஹ்மான், சைபுதீன், தஸ்கின் அகமது, ஹசன் மஹ்மூத், எபாதத் ஹொசைன், நஜ்முல், நசம் அகமது.