

ஜோகன்னஸ்பர்க்: டி 20 உலகக் கோப்பை தொடருடன் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் மார்க் பவுச்சர் விலகுகிறார்.
தென் ஆப்பிரிக்க அணியின்முன்னாள் வீரரான மார்க் பவுச்சர் கடந்த 2019-ம் ஆண்டு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள 50 ஓவர் உலகக் கோப்பை வரை அவர், பயிற்சியாளராக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் அடுத்த மாதம் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பை தொடருடன் பயிற்சியாளர் பதயில் இருந்து பவுச்சர் விலகுவதாக அறிவித்துள்ளார். இதை தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.