

பெல்கிரேடு: உலக மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் 3 முறை காமன்வெல்த்தில் தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகத் தோல்வியடைந்தார்.
செர்பியாவின் பெல்கிரேடு நகரில் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஃப்ரீஸ்டைல் 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் வினேஷ் போகத், மங்கோலியாவின் குலான் பத்குயாக்கை எதிர்கொண்டார். இதில் வினேஷ் போகத் 0-7 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். இந்தத் தொடரில் முன்னாள் சாம்பியனான ஜப்பானின் அகாரி புஜினாமி காயம் காரணமாக விளையாடவில்லை. இதனால் வினேஷ் போகத், பதக்கம் வெல்லக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தொடக்க நிலையிலேயே தோல்வியை சந்தித்துள்ளார்.