ஆசிய கோப்பையை வென்று நாடு திரும்பிய இலங்கை அணியினருக்கு உற்சாக வரவேற்பு அளித்த மக்கள்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள். 
இலங்கை கிரிக்கெட் வீரர்கள். 
Updated on
1 min read

கொழும்பு: ஆசிய கோப்பையை வென்று தாய் நாட்டுக்கு திரும்பியுள்ள இலங்கை அணியினருக்கு அந்த நாட்டின் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். அந்த வரவேற்பு விமான நிலையத்தில் இருந்து தொடங்கி உள்ளது. இது 22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மக்களிடையே புன்னகையை பூக்க செய்துள்ளது.

தீவு தேசமான இலங்கை மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. அந்த நாட்டில் மக்கள் உயிர் வாழ தேவையான அத்தியாவசிய தேவைகளுக்கு தட்டுப்பாடு என்ற நிலை. இத்தகைய சூழலில் அந்த மக்கள் ஆட்கொண்டுள்ள துயரை வாட்டம் நீக்கும் மருந்தாக அமைந்துள்ளது கிரிக்கெட் விளையாட்டு. அது பலரது மனதில் நம்பிக்கையை விதைக்க செய்துள்ளது.

நடப்பு ஆசிய கோப்பை தொடரை நடத்தும் வாய்ப்பை மிஸ் செய்தது தொடங்கி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் படுமோசமான தோல்வியை தழுவியது. அடுத்த போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக இறுதி வரை போராடி வெற்றி பெற்றது என சில பின்னடைவுகளை ஆசிய கோப்பை தொடரில் சந்தித்தது இலங்கை அணி. அதன் பிறகு அனைத்தும் சக்ஸஸ் தான். தொடர்ச்சியாக 5 போட்டிகளில் வெற்றி பெற்று ஆசிய சாம்பியனாகி உள்ளது. அதுவும் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற அணிகளை இலங்கை வென்றுள்ளது.

கோப்பையை வெல்வதற்கான இறுதிப் போட்டியில் டாஸ் வென்று முதலில் பந்து வீசும் அணிக்கே வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என சூத்திரங்களை எல்லாம் தவிடு பொடியாக்கி முதலில் பேட் செய்து ஆட்டத்தையும் வென்றது இலங்கை. அப்படிப்பட்ட வெற்றியோடு நாடு திரும்பிய அந்த அணிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்துள்ளனர். வீரர்கள் மேற்கூரை இல்லாத பேருந்தில் கொழும்பு நகரை வலம் வந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in