நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியுடன் இன்று மோதல்: வெற்றி நெருக்கடியில் சென்னையின் எப்சி

நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியுடன் இன்று மோதல்: வெற்றி நெருக்கடியில் சென்னையின் எப்சி
Updated on
1 min read

ஐஎஸ்எல் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னையின் எப்சி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதுகின்றன.

நடப்பு சாம்பியனான சென்னை 12 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அரை இறுதிக்கு முன்னேற வேண்டு மானால் இன்றைய ஆட்டத்திலும், கடைசி ஆட்டத்தில் கோவாவையும் வீழ்த்த வேண்டும் என்ற நெருக்கடி யில் உள்ளது சென்னை அணி.

கடந்த சீசனில் சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது. கடைசி நேரத்தில் அடுத்தடுத்து வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. மேலும் இறுதிப்போட்டியில் கோவாவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை அணி இந்த சீசனில் கடந்த ஐந்து போட்டிகளில் மூன்றில் தோல்வியடைந்தது. குறிப்பாக இக்கட்டான நேரத்தில் மும்பைக்கு எதிராக தோல்வியடைந்தது பின்ன டைவை ஏற்படுத்தி உள்ளது. நார்த் ஈஸ்ட் மற்றும் கோவா அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டுமானால் சென்னை வீரர்கள் களத்தில் கூடுதல் உத்வேகத்துடன் விளையாடுவது அவசியம்.

சென்னை அணியின் பயிற்சியாளர் மார்கோ மெட்டராசி கூறும்போது,

‘‘அடுத்த இரண்டு போட்டிகளிலும் முக்கியமானவை என்பதும் அதில் ஆறு புள்ளிகளைப் பெற வேண்டும் என்பதையும் நன்கு உணர்ந்துள்ளோம். எந்த அணி யையும் வீழ்த்த முடியும் என்பதை கடந்த காலங்களில் நாங்கள் நிரூபித்துள்ளோம்’’ என்றார்.

நார்த்ஈஸ்ட் யுனைடெட் அணி 11 போட்டிகளில் 14 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அந்த அணிக்கு இன்றைய ஆட்டம் தவிர்த்து மேலும் இரு போட்டிகள் உள்ளது.

கேரளா வெற்றி

இதற்கிடையே நேற்று கொச்சி யில் நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா அணி 2-1 என்ற கோல் கணக்கில் புனே அணியை தோற்கடித்து 18 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது. கேரள அணி தரப்பில் 7-வது நிமிடத்தில் நசானும், 57-வது நிமிடத்தில் ஹியூஸூம் தலா ஒரு கோல் அடித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in