Published : 12 Sep 2022 06:50 AM
Last Updated : 12 Sep 2022 06:50 AM

அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம்: இகா ஸ்வியாடெக் சாம்பியன்

அமெரிக்காவின் நியூயார்க்கில் நேற்று நடைபெற்ற அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார். வெற்றிக்குப் பின்னர் சாம்பியன் கோப்பையை உயர்த்திப் பிடிக்கும் இகா ஸ்வியாடெக்.

நியூயார்க்: அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் சாம்பியன் பட்டம் வென்றார்.

4 கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அதிகாலை நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றில் 5-ம் நிலைவீராங்கனையும், துனிசியா நாட்டைச் சேர்ந்தவருமான ஆன்ஸ்ஜபேரும், போலந்து வீராங்கனையான இகா ஸ்வ்யாடெக்கும் மோதினர்.

இதில் இகா ஸ்வியாடெக் 6-2, 7-6 என்ற நேர் செட் கணக்கில் ஜபேரை வீழ்த்தினார். இதன்மூலம் 2022-ம் ஆண்டுக்கான அமெரிக்க ஓபன் மகளிர் பிரிவு பட்டத்தைக் கைப்பற்றினார்.

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் அவர் வெல்லும் முதலாவது பட்டமாகும் இது. இதற்கு முன்பு அவர் பிரெஞ்சு ஓபனில் 2 முறை (2020, 2022) பட்டம் வென்றிருந்தார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x