சென்னை அணிக்கு 2வது வெற்றி

சென்னை அணிக்கு 2வது வெற்றி
Updated on
1 min read

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று குவாஹாட்டியில் நடை பெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பி யனான சென்னையின் எப்சி - நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பிலும் கோல் அடிக்கப்படவில்லை. 49-வது நிமிடத்தில் சென்னை அணி முதல் கோலை அடித்தது.

இந்த கோலை டேவிட் சக்சி அடித்தார். இதனால் சென்னை 1-0 முன்னிலை பெற்றது. கடைசி வரை நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியால் கோல் அடிக்க முடியாமல் போனது. முடிவில் சென்னை அணி 1-0 என வெற்றி பெற்றது. 4 ஆட்டத்தில் விளையாடி உள்ள சென்னை அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் 7 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in