

கெய்ர்ன்ஸ்: நியூஸிலாந்து அணிக்கு எதிராக கெய்ர்ன்ஸ் நகரில் இன்று நடைபெறும் 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியுடன் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார்.
35 வயதான ஆரோன் பின்ச் 145 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடி 17 சதங்களுடன் 5,401 ரன்கள் சேர்த்துள்ளார். 54 ஆட்டங்களுக்கு கேப்டனாக இருந்துள்ளார்.
2015-ம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் ஆரோன் பின்ச் இடம் பெற்றிருந்தார்.