

தமிழக தடகளச் சங்க மாநிலத் தலைவர் டபிள்யு.ஐ.தேவாரம் கோவையில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
32-வது தேசிய ஜூனியர் தடகளப் போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் வரும் நவம்பர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் நாடு முழுவதுமிருந்து 3,000 மாணவ, மாணவிகள் பங்கேற்கின்றனர். 14, 16, 18 மற்றும் 20 வயதுக்கு உட்பட் டோர் என 4 பிரிவுகளில் நடை பெறும் இப்போட்டியில் ஓட்டம், தடை தாண்டும் ஓட்டம், நீளம், உயரம் தாண்டுதல், ஈட்டி எறிதல், குண்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளன.
தமிழகத்தில் 6-வது முறை யாகவும், கோவையில் முதல் முறையாகவும் நடைபெறும் இப்போட்டியில் தேர்வு செய்யப் படும் மாணவ, மாணவிகள், ஆசிய அளவிலான ஜூனியர் தடகளப் போட்டியில் பங்கேற்பார்கள். இப்போட்டியில் தமிழக வீரர், வீராங்கனைகள் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.