பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு

பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு
Updated on
1 min read

லோதா குழு பரிந்துரைகள் விவகாரம் தொடர்பாக முடிவு எடுக்க மும்பையில் நேற்று நடைபெற இருந்த பிசிசிஐ சிறப்பு பொதுக்குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து லோதா குழு பரிந்துரைகள் வழங்கியிருந்தது. இந்த பரிந்துரைகளை அமல் படுத்துவதில் பிசிசிஐ தயக்கம் காட்டி வந்தது. இதுதொடர்பான அறிக்கையை லோதா குழு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.

இதனை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான அமர்வு, பிசிசிஐ-க்கு கடும் கண்டனம் தெரிவித்ததுடன் நீதிமன்றத்தின் உத்தரவுகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும். உத்தரவுக்கு கட்டுப் படவில்லையென்றால் கட்டுப்பட வைக்க வேண்டியிருக்கும் என எச்சரித்து.

மேலும் லோதா குழு பரிந் துரைகள் தொடர்பாக எடுக்கப் பட்ட நடவடிக்கைகள் குறித்து அக்டோபர் 6-ம் தேதிக்குள் பிசிசிஐ அறிக்கை அளிக்க வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றம் உத்தர விட்டது.

இதற்கிடையே லோதா குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது தொடர்பாக பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நேற்று கூடியது. இந்த கூட்டம் தொடங்கிய 10 நிமிடங்களில் திடீரென ஒத்திவைக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த சில உறுப்பினர்கள் முறையான அங்கீகார கடிதம் இல்லாமல் வந்ததால் கூட்டம் ஒத்திவைக்கப் பட்டதாக பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

லோதா குழுவினர் பிசிசிஐக்கு இரண்டு காலக்கெடுகளை வழங்கி யிருந்தனர். அதில் நேற்றுடன் ஒரு காலக்கெடு முடிவடைந்தது. இந்த காலக்கெடுவில் நிர்வாக ரீதியிலான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in