பாகிஸ்தான் அணியின் ஆலோசகரானார் ஹைடன்

பாகிஸ்தான் அணியின் ஆலோசகரானார் ஹைடன்

Published on

கராச்சி: ஆடவருக்கான ஐசிசி டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்தத் தொடரில் பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் மேத்யூ ஹைடனை நியமித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற டி 20 உலகக் கோப்பையிலும் ஹைடன், பாகிஸ்தான் அணியின் ஆலோசகராக செயல்பட்டிருந்தார். அந்தத் தொடரில் பாகிஸ்தான் அணி அரை இறுதி வரை முன்னேற்றம் கண்டிருந்தது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in