Published : 09 Sep 2022 03:43 PM
Last Updated : 09 Sep 2022 03:43 PM

71-வது சர்வதேச சதம்: விராட் கோலி தகர்த்த 9 சாதனைகளின் பட்டியல்

விராட் கோலி.

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுக்கும் ஒவ்வொரு ரன்னுமே சாதனைக் கற்களாக மாறி வருகின்றன. அந்த வகையில் நடப்பு ஆசிய கோப்பை தொடரில் ஆப்கன் அணிக்கு எதிராக அவர் பதிவு செய்த சதம் பல்வேறு சாதனைகளை தகர்த்தும், புதிய மைல்கற்களை அடையவும் செய்துள்ளது. அது குறித்து முழுமையாகப் பார்ப்போம்.

கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு கோலி தனது முதல் சதத்தைப் பதிவு செய்துள்ளார். துபாயில் தனது சர்வதேச சதத்தின் வறட்சியை போக்கியுள்ளார். 61 பந்துகளில் 122 ரன்களை விளாசி இருந்தார். சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்துள்ள முதல் சதம் இது. இதன்மூலம் அவர் தகர்த்துள்ள சில சாதனைகள், எட்டியுள்ள மைல்கற்கள்:

  • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் ஆகியுள்ளார் விராட். இதன் மூலம் ரோகித் சர்மாவை அவர் முந்தியுள்ளார். ரோகித் டி20 கிரிக்கெட்டில் அதிகபட்சமாக 118 ரன்களை இலங்கைக்கு எதிராக எடுத்துள்ளார்.
  • ரெய்னா, ரோகித், ராகுல் என RRR வரிசையில் உள்ள வீரர்களுக்கு அடுத்ததாக மூன்று ஃபார்மெட்டிலும் சதம் பதிவு செய்த இந்திய வீரர் என்ற மைல்கல்லை எட்டியுள்ளார் கோலி.
  • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சதம் விளாசிய ஆறாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
  • முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சர்வதேச கிரிக்கெட்டில் 71 சதங்களை விளாசியுள்ளார். அதனை சமன் செய்துள்ளார் கோலி. அதிக சதங்கள் விளாசிய வீரர்களில் இரண்டாவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் 100 சதங்களுடன் டெண்டுல்கர் உள்ளார்.
  • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 100 சிக்ஸர்களை விளாசிய இரண்டாவது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
  • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 3500 ரன்களை கடந்த இரண்டாவது பேட்ஸ்மேனாகி உள்ளார் கோலி.
  • மூன்று ஃபார்மெட்டையும் சேர்த்து 24000 சர்வதேச ரன்களை எடுத்த ஏழாவது பேட்ஸ்ட்மேன் என்ற சாதனையை படைத்துள்ளார். டெண்டுல்கர் மற்றும் டிராவிட் இதே சாதனையை இதற்கு முன் படைத்துள்ளனர்.
  • ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக ரன்களை எடுத்த இந்திய பேட்ஸ்மேன் (1042 ரன்கள்) என்ற சாதனையை படைத்துள்ளார்.
  • சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார் கோலி. இதன் மூலம் ஆப்கன் வீரர் முகமது நபி சாதனையை சமன் செய்துள்ளார். இருவரும் 13 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x