Published : 29 Oct 2016 01:48 PM
Last Updated : 29 Oct 2016 01:48 PM

ஜூனியர் ஹாக்கி போட்டி: இந்திய அணி அபார வெற்றி

ஜூனியர் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 3-1 என்ற கோல்கணக்கில் ஸ்பெயினை வென்றது.

4 நாடுகள் கலந்துகொள்ளும் ஜூனியர் ஹாக்கி போட்டி வாலென்சியா நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இந்திய அணி, ஸ்பெயினை 3-1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது. இந்திய அணிக்காக பர்வீந்தர் சிங், நீலகண்ட சர்மா, அர்மான் குரேஷி ஆகியோர் கோல்களை அடித்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது.

5 நாடுகள் கலந்துகொள்ளும் பெண்களுக்கான ஜூனியர் ஹாக்கி போட்டிகள் பிரசல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய மகளிர் அணி ஜெர்மனியிடம் 1-2 என்ற கோல்கணக்கில் போராடி தோற்றது. இப்போட்டியில் ஜெர்மனி அணிக்காக எலிசா கிரேவ், ஜூலியா மெஃபர்ட் ஆகியோர் கோல் அடித்தனர். இந்திய அணியில் ஜோதி குப்தா ஒரு கோல் அடித்தார். -பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x