2-வது சுற்றில் அஜெய் ஜெயராம்

2-வது சுற்றில் அஜெய் ஜெயராம்
Updated on
1 min read

டென்மார்க் ஓபன் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் அஜெய் ஜெயராம் 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

ஓடென்ஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியின் முதல் சுற்று ஆட்டத்தில் சாய் பிரணீத் 17-21, 21-19, 15-21 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் பூன்சக்கிடம் வீழ்ந்தார். மற்றொரு முன்னணி இந்திய வீரரான அஜெய் ஜெயராம் 21-15, 21-16 என்ற நேர் செட்டில் தாய்லாந்தின் போன்ஷாக் பொன்சானாவை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறி னார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in