சச்சின் ஓய்வு பெற்றவுடன் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்: தங்க வீரர் அபினவ் பிந்த்ரா

சச்சின் ஓய்வு பெற்றவுடன் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விட்டேன்: தங்க வீரர் அபினவ் பிந்த்ரா
Updated on
1 min read

சச்சின் டெண்டுல்கரின் தீவிர ரசிகரான துப்பாக்கி சுடுதல் ஒலிம்பிக் தங்க வீரர் அபினவ் பிந்த்ரா, சச்சின் ஓய்வு பெற்ற பிறகே கிரிக்கெட் பார்ப்பதில்லை என்று தெரிவித்துள்ளார்.

பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் 10மீ ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதலில் தங்கம் வென்று தேசத்திற்கு பெருமை சேர்த்த அபினவ் பிந்த்ரா பெரிய கிரிக்கெட் ரசிகரும் கூட, குறிப்பாக சச்சின் டெண்டுல்கர் மீது அளவுகடந்த நேயம் வைத்திருப்பவர்.

இந்நிலையில் டெலிகிராப் பத்திரிகைக்கு அவர் பேட்டியளித்த போது கூறியதாவது:

இந்திய அணியின் கிரிக்கெட் ஆட்டங்களை பார்த்து வந்தேன். ஆனால் சச்சின் டெண்டுல்கர் ஓய்வு பெறுவதாக அறிவித்தவுடன் நான் கிரிக்கெட் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். பல வீரர்கள் இருக்கலாம் ஆனால் என்னைப்பொறுத்த வரை சச்சின் வேறுமாதிரியான ஒரு வீரர், மற்ற எல்லோரையும் விட சற்று உயரத்தில் இருப்பவர்தான் சச்சின்.

கிரிக்கெட் ஆட்டம் வளர வேண்டுமென்றால் உயர் போட்டி நிரம்பிய மட்டத்தில் குறைந்தது 100 அணிகளாவது ஆட வேண்டும். ஆனால் தற்போது சில அணிகளே ஆடிவருகின்றன.

இவ்வாறு கூறினார் அபினவ் பிந்த்ரா.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in