

சென்னை: துபாய் ஓபன் செஸ் தொடரை வென்றுள்ள அரவிந்த் சிதம்பரத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் ஸ்டாலின், #DubaiOpen செஸ் தொடரை வென்று தனது வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ள அரவிந்த் சிதம்பரம் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுகள்.
இத்தொடரில், முதல் 10 இடங்களில் இந்திய இளைஞர்கள் எழுவர் இடம்பெற்றுள்ளனர் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துகள் என்று பதிவிட்டுள்ளார்.
மூன்று ஆண்டுகளுக்கு பின்னர் நடைபெற்ற 22-வது துபாய் ஓபன் செஸ் தொடரில் பிரக்ஞானந்தாவுடன் அரவிந்த் சிதம்பரம் மோதிய இறுதிப்போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் பிரக்ஞானந்தா இரண்டாவது இடம் பிடித்தார்.