IND vs PAK | தோல்விக்கு காரணம் என்ன? - கேப்டன் ரோகித் விளக்கம்

களத்தில் இந்திய அணி வீரர்கள்.
களத்தில் இந்திய அணி வீரர்கள்.
Updated on
2 min read

நடப்பு ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. இந்திய அணியின் வீழ்ச்சிக்கு காரணம் என்ன? கேப்டன் ரோகித் என்ன சொல்லியுள்ளார் என்பதை விரிவாக பார்ப்போம்.

இந்த போட்டியில் இந்திய அணி 20 ஓவர்களில் 181 ரன்கள் எடுத்தது. 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் விரட்டியது. நிதானமாக இன்னிங்ஸை தொடங்கி ஆட்டத்தில் வேகத்தை கூட்டினர் பாகிஸ்தான் பேட்ஸ்மேன்கள். இந்திய அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். மொத்தம் 19 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்களை விளாசி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது பாகிஸ்தான் அணி. குறிப்பாக முகமது ரிஸ்வான் மற்றும் நவாஸ் கூட்டணி சிறப்பாக விளையாடி அந்த அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தனர்.

தோல்விக்கு காரணம் என்ன?

இந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு பவுலிங் தான் மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே போல ஃபீல்டிங்கின் போது களத்தில் மேற்கொண்ட சில பிழைகளும் (Error) தோல்விக்கு காரணம் என சொல்லப்படுகிறது.

>பிஷ்னோய் வீசிய 18-வது ஓவரின் மூன்றாவது பந்தை பாகிஸ்தான் வீரர் ஆசிஃப் அலி எதிர்கொண்டார். பந்து டாப் எட்ஜ் ஆகி ஹர்ஷ்தீப் வசம் தஞ்சம் அடைந்தது. ஆனால் அந்த வாய்ப்பை நழுவவிட்டார் அவர். இந்திய அணியின் தோல்விக்கு இந்த கேட்ச் டிராப் காரணம் என பலரும் சொல்லி வருகின்றனர். அப்போது அந்த அணியின் வெற்றிக்கு 15 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்டது.

>அந்த வாய்ப்புக்கு முன்னதாக அதே ஓவரின் மூன்றாவது பந்து Wide ஆக வீசப்பட்டது. அந்த பந்து ஆசிஃப் அலியின் பேட்/கிளவுஸில் பட்டது போல இருந்தது. மூன்றாவது அம்பயர் நீண்ட நேரம் ரிவ்யூ செய்த பின்னர் நாட்-அவுட் என அறிவித்திருந்தார்.

>புவனேஷ்வர் வீசிய 19-வது ஓவரில் மட்டும் இந்தியா 19 ரன்களை லீக் செய்திருந்தது. அந்த ஓவரில் ரன்களை கட்டுப்படுத்தி இருக்கலாம்.

>முக்கியமாக இந்திய அணி பவுலர்களால் முகமது ரிஸ்வான் - முகமது நவாஸ் கூட்டணியை தகர்க்க முடியவில்லை. அவர்களது வலது மற்றும் இடது காம்போ களத்தில் நீண்ட நேரம் தொடர்ந்தது பாகிஸ்தான் வெற்றிக்கு சாதகமாக அமைந்தது.

>இந்திய பவுலர்கள் சிக்கனமாக பந்து வீச தவறியது. நான்கு ஓவர்கள் பந்து வீசி புவனேஷ்வர் 40 ரன்கள், ஹர்திக் பாண்டியா 44 ரன்கள், ஷால் 43 ரன்கள் லீக் செய்திருந்தனர்.

>ஆறாவது பவுலிங் ஆப்ஷனை இந்திய அணி முயற்சி செய்யாததும் ஒரு காரணம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

>அஷ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் போன்ற வீரர்கள் ஆடும் லெவனில் சேர்க்காதது குறித்தும் ரசிகர்கள் கேள்வி எழுப்புவதை கவனிக்க முடிந்தது.

கேப்டன் ரோகித் விளக்கம்

“முதல் இன்னிங்ஸில் நாங்கள் எடுத்த 180 ரன்கள் சிறந்த ஸ்கோர் என நினைக்கிறேன். இந்த ஸ்கோர் எல்லாவிதமான ஆடுகளங்கள் மற்றும் கண்டீஷனிலும் சிறந்தது எனவும் கருதுகிறேன். நெருக்கடி மிக்க இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி சிறப்பாக விளையாடி இருந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளத்தில் கொஞ்சம் மாற்றம் இருப்பதை கவனிக்க முடிந்தது. இந்த போட்டி எங்களுக்கு நல்லதொரு படிப்பினையை கொடுத்தது. இந்த மாதிரியான ஸ்கோரை Defend செய்யும் போது எங்களது மைண்ட் செட் எப்படி இருக்க வேண்டும் என்பதை அறிந்து கொண்டோம். கோலி சிறப்பாக விளையாடி இருந்தார்” என ரோகித் தெரிவித்தார்.

இந்திய அணி அடுத்ததாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக விளையாட உள்ளது. இந்த இரண்டு போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றால் நடப்பு ஆசிய கோப்பையின் இறுதி போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பை உறுதி செய்யும். இந்திய அணி நிச்சயம் ஃபைனலில் விளையாடும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நாமும் அதையே நம்புவோம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in