அடுத்த ஐபிஎல் சீசனிலும் சிஎஸ்கே கேப்டனாக தோனி நீடிப்பார்: சிஇஓ காசி விஸ்வநாதன் தகவல்

அடுத்த ஐபிஎல் சீசனிலும் சிஎஸ்கே கேப்டனாக தோனி நீடிப்பார்: சிஇஓ காசி விஸ்வநாதன் தகவல்
Updated on
1 min read

அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார் என அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷனின் வெள்ளி விழா திருவாரூரில் நேற்று நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.எம்.சிவசுப்பிரமணியன் தலைமை வகித்தார். செயலாளர் பசுபதி வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் ரமேஷ் மற்றும் சங்க நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சிஇஓ காசி விஸ்வநாதன், ஐபிஎல் வீரர் ஆர்.எஸ்.சாய் கிஷோர், கிரிக்கெட் சங்க மாநிலச் செயலாளர் ராமசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, கிரிக்கெட் வீரர்களை வாழ்த்திப் பேசினர்.

மேலும், சங்கத்தின் வெள்ளி விழா ஆண்டையொட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசுகளை வழங்கி, வெள்ளி விழா மலரை வெளியிட்டனர்.

இந்த நிகழ்ச்சியின்போது, “அடுத்த ஐபிஎல் சீசனிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக மகேந்திர சிங் தோனி நீடிப்பார்’’ என அந்த அணியின் சிஇஓ காசி விஸ்வநாதன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in