Published : 06 Jun 2014 03:27 PM
Last Updated : 06 Jun 2014 03:27 PM

உலகக் கோப்பை ஹாக்கி: கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் இல்லையேல் இந்தியா இல்லை

தி ஹேக்கில் நடைபெறும் உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நேற்று ஸ்பெயின் அணியுடன் 1-1 என்று இந்தியா டிரா செய்து முதல் புள்ளியைப் பெற்றது.

நேற்றும் இந்தியா டிரா செய்ததற்குக் காரணம் இந்திய அணியின் அபாரமான கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ்தான் என்றால் அது மிகையாகாது. குறைந்தது 4 கோல்களையாவது அவர் தடுத்திருப்பார்.

முதல் போட்டியல் பெல்ஜியம் அணிக்கு எதிராகவும் ஸ்ரீஜேஷ் இல்லையேல் இந்தியா பெரிய தோல்வியையே தழுவியிருக்கும்.

இங்கிலாந்துக்கு எதிராகவும் ஸ்ரீஜேஷ் தடுத்த கோல்கள் குறைந்தது 2 இருக்கும்.

நேற்று இந்தியா தாக்குதல் ஆட்டம் ஆடினாலும், கோல்களை அடிப்பதில் சோரம் போயின. நேற்றும் ஸ்ரீஜேஷ் இந்திய அணியைக் காப்பாற்றினார்.

7வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி கார்னர் கிடைத்தது ஸ்ரீஜேஷ் ஸ்பெயின் அடியைத் தடுத்தார்.

இதைவிட 17வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் சால்வடோர் பியரா அபாரமாகப் பந்தை எடுத்துச் செல்ல இந்திய அணி வீரர்கள் யாரும் இல்லாத நிலையில் கோல் கீப்பர் ஸ்ரீஜேஷ், பியரா நேருக்கு நேர் வந்தனர். பியரா அடித்தார் அதனை சரியாகக் கணித்து ஸ்ரீஜேஷ் தடுத்து வெளியேற்றினார். இது உண்மையில் அபாரமான தடுப்பாகும். ஸ்பெயின் நிச்சயம் இது கோல் என்றே நம்பியிருக்கும்.

மீண்டும் இந்திய பாதுகாப்பு அரண் சோடை போக ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இந்த முறையும் ஸ்ரீஜேஷ் ஸ்பானிய வீரர் அடியை தடுத்தார்.

கடைசியில் இந்தியாவுக்கு பெனால்டி ஸ்ட்ரோக் வாய்ப்பு கிடைக்க ருபிந்தர் பால் சிங் அதனை கோலாக மாற்றினார். ஆனால் அடுத்த 6வது நிமிடத்தில் கேப்டன் சண்ட்டி பிரெக்சியா அபாரமாக ஒரு பந்தை எடுத்துக் கொண்டு வந்து ராக் ஆலிவாவிற்கு பாஸ் செய்ய அவர் கோலாக மாற்ற 1-1 என்று சமன் ஆனது.

இந்தியாவுக்கு 3 பெனால்டி கார்னர் வாய்ப்புகள் கிடைத்தன ஒன்றைக்கூட கோலாக மாற்ற முடியவில்லை. மேலும் இந்திய அணியினர் பந்து கைக்குக் கிடைத்தபோது அதை வைத்துக் கொண்டு தாமதப்படுத்தினரே தவிர விரைவாக பாஸ் செய்யவில்லை. சிறந்த பதிலி வீரர்களும் இல்லை.

வேகமாக பாஸ் செய்வதில் இந்திய அணி இந்த 3 போட்டிகளிலும் சோடை போனது. அதுதான் தோல்விக்குக் காரணமாக அமைந்தது.

இந்தியா பிரிவு ஏ-யில் தற்போது 5வது இடத்தில் உள்ளது. அடுத்த போட்டியில் மலேசியாவைச் சந்திக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x