விநாயகர் சதுர்த்தி | இன்ஸ்டா மூலம் வாழ்த்து சொன்ன டேவிட் வார்னர்

வார்னரின் இன்ஸ்டாகிராம் பதிவு.
வார்னரின் இன்ஸ்டாகிராம் பதிவு.
Updated on
1 min read

இந்தியா உட்பட உலகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வரும் இனிய வேளையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வீரர் டேவிட் வார்னர் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அவர் இந்த வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை சதுர்த்தி தினத்தன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு பலரும் தங்களது விநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதில் ஒருவராக இணைந்துள்ளார் டேவிட் வார்னர். இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் மனம் கவர்ந்த வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களில் டேவிட் வார்னருக்கு எப்போதும் தனி இடம் உள்ளது. அதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்தது ஐபிஎல் கிரிக்கெட் தான். ஹைதராபாத், டெல்லி என அவர் மாறி மாறி விளையாடினாலும் அவருக்கு அமோக ஆதரவு இருக்கும். ஹைதராபாத் அணியில் கடந்த 2021 சீசனில் அவர் எதிர்கொண்ட சில சங்கடத்தின் போதும் அவருக்கு ரசிகர்களின் ஆதரவு இருந்தது.

வார்னர் சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இயங்கி வருபவர். அவரது பதிவுகள், பகிரும் ரீல்ஸ் என அனைத்தும் கவனம் பெறும். அந்த வகையில் இப்போது அவர் இன்ஸ்டாகிராம் மூலம் விநாயகர் சதுர்த்தி விழா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“எனது நண்பர்கள் அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கள். நீங்கள் அனைவரும் மகிழ்வுற்று இருக்க விரும்புகிறேன்” என வார்னர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். அதோடு இந்தப் பதிவில் ஆஸ்திரேலிய அணியின் ஜெர்சியை அணிந்துள்ள அவர் இரு கைகளையும் கூப்பி வணங்குகிறார். அதன் பின்னணியில் விநாயகர் சிலை ஒன்று இருக்கும் படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்தப் பதிவை இன்ஸ்டாவில் மட்டும் சுமார் 11 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in