

ஆஸ்திரேலியா செல்லும் இந்தியா ஏ அணியில் ராபின் உத்தப்பா, மணீஷ் பாண்டே ஆகியோர் தேர்வாக வாய்ப்புள்ளது. நாளை இந்தத் தொடருக்கான அணி மும்பையில் அறிவிக்கப்படவுள்ளது.
மணீஷ் பாண்டே, ராபின் உத்தப்பா ஆகியோர் ரஞ்சி மற்றும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் அபாரமான இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளனர்.
அணித் தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் பார்வையில் உள்ள மேலும் சில வீரர்கள் மனோஜ் திவாரி, கேதர் ஜாதவ், பர்வேஸ் ரசூல், அக்ஷர் படேல், உமேஷ் யாதவ், வினய் குமார், மோகித் சர்மா மற்றும் அமித் மிஸ்ரா ஆகியோர்களாவர்.
ஜூலை 2ஆம் தேதி தொடங்கும் இந்தத் தொடர் ஆகஸ்ட் 6ஆம் தேதி வரை நீடிக்கும். இதில் ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக இரண்டு 4 நாள் போட்டிகளில் ஆடுகிறது இந்தியா, மேலும் தென் ஆப்பிரிக்கா ஏ, ஆஸ்திரேலியா தேசியத் திறன் அணி, ஆஸ்திரேலியா ஏ ஆகியவை பங்கேற்கும் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது.