ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அதிர்ச்சி தோல்வி

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி: நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அதிர்ச்சி தோல்வி
Updated on
1 min read

ஐஎஸ்எல் கால்பந்து போட்டி யில் நேற்று மும்பையில் நடைபெற்ற ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் - மும்பை சிட்டி எப்சி அணி கள் மோதின. முதல் பாதியில் இரு அணிகள் தரப்பிலும் கோல் எதும் அடிக்கப்பட வில்லை. 55-வது நிமிடத்தில் மும்பை அணி முதல் கோலை அடித்தது.

நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியின் ரீகன் சிங், பாக்ஸ் பகுதியில் வைத்து மும்பை வீரர் அடித்த பந்தை முரட்டுத்தனமாக தடுக்க முயன்றார். இதனால் மும்பை அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதை அந்த அணி வீரர் டிகோ போர்லன் கோலாக மாற்றினார். இதனால் மும்பை அணி 1-0 என முன்னிலை பெற்றது.

நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணியால் இதற்கு கடைசி வரை பதிலடி கொடுக்க முடி யாமல் போனது. முடிவில் மும்பை அணி 1-0 என வெற்றி பெற்றது. மும்பை அணிக்கு இது 2-வது வெற்றி யாக அமைந்தது. அதே வேளையில் தொடர்ச்சியாக இரு வெற்றிகளை பெற்ற நார்த் ஈஸ்ட் யுனைட்டெட் அணி முதல் தோல்வியை சந்தித்தது.

தொடரின் 8-வது நாளான இன்று கோவாவில் நடை பெறும் ஆட்டத்தில் எப்சி புனே சிட்டி - எப்சி கோவா அணிகள் மோதுகின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in