

தமிழகத்தின் மிகப்பெரிய சைக்கிள் பந்தயமான தமிழ்நாடு சைக்கிள் லீக் (டிசிஎல்) போட்டி சென்னையை அடுத்த இருங்காட்டுக்கோட்டையில் உள்ள மெட்ராஸ் இன்டர்நேஷனல் சர்க்கியூட் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
போட்டி தொடக்க விழாவில் தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் வீ. மெய்யநாதன், டிசிஎல் நிறுவனர் எம்.சுதாகர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தப் போட்டியில் தமிழகம் முழுவதிலும் இருந்து பல்வேறு அணிகள் கலந்துகொண்டன. முதல் சுற்றில் ரேன்சைக்கர்ஸ் ராணிப்பேட்டை வேலூர் அணி 41 புள்ளிகளுடன் வெற்றி பெற்றது.