ஐஎஸ்எல்: மும்பைக்கு 3-வது வெற்றி

ஐஎஸ்எல்: மும்பைக்கு 3-வது வெற்றி
Updated on
1 min read

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்சி - அட்லெட்டிகோ டி கொல்கத்தா அணிகள் மோதின.

79-வது நிமிடத்தில் மும்பை முதல் கோலை அடித்தது. அந்த அணியின் போர்லன் இந்த கோலை அடித்தார். இதனால் மும்பை 1-0 என முன்னிலை வகித்தது. கொல்கத்தா அணியால் இதற்கு கடைசி வரை பதிலடி கொடுக்க முடியாமல் போனது.

முடிவில் மும்பை அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. 7 ஆட்டத்தில் விளையாடி உள்ள மும்பை அணி 3 வெற்றி, 2 டிரா, 2 தோல்விகளுடன் 11 புள்ளிகள் பெற்று பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in