டபிள்யூடிஏ டென்னிஸ்: சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி

டபிள்யூடிஏ டென்னிஸ்: சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி
Updated on
1 min read

டபிள்யூடிஏ டென்னிஸ் போட்டிகள் சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் முன்னணி டென்னிஸ் வீராங்கனை யான ரொமேனியாவின் சிமோனா ஹாலெப், ஸ்லோவாக்கிய வீராங்கனையான சிபுல்கோவாவை எதிர்த்து ஆடினார்.

இப்போட்டியின் முதல் செட்டை 6-3 என்ற புள்ளிக் கணக்கில் வென்ற சிபுல்கோவா, ஹாலெப்புக்கு அதிர்ச்சி கொடுத்தார். இதிலிருந்து சுதாரித்துக்கொண்ட ஹாலெப், அடுத்த சுற்றில் கடுமையாக போராடினார். இதனால் இரு வீராங்கனைகளும் 6-6 என்று சமநிலை பெற்றனர். இதைத்தொடர்ந்து டைபிரேக்கர் வழங்கப்பட்டது. இதில் வெற்றிபெற்ற சிபுல்கோவா, 6-3, 7-6 (7-5) என்ற செட்கணக்கில் ஹாலெப்பை வீழ்த்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in