ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா பட்டம் வென்றது

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி: இந்தியா பட்டம் வென்றது
Updated on
1 min read

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டத்தை வென்றது.

மலேசியாவில் உள்ள குவான்டன் நகரில் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி நடைபெற்றது. நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி நடப்பு சாம்பியனான பாகிஸ்தானை எதிர்த்து ஆடியது. இப்போட்டியில் 18-வது நிமிடத்தில் ருபீந்தர் பால் சிங்கும், 23-வது நிமிடத்தில் அஃபான் யூசுப்பும் கோல் அடிக்க இந்திய அணி 2-0 என்ற முன்னிலையைப் பெற்றது. ஆனால் பாகிஸ்தான் வீரர்களான அலீம் பிலால் 26-வது நிமிடத்திலும், அலிஷான் 38-வது நிமிடத்திலும் கோல் அடித்து ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்தனர்.

இதைத்தொடர்ந்து இரு அணிகளும் முன்னிலை பெற கடுமையாக போராடியது. இறுதியில் 51-வது நிமிடத்தில் நிகின் திம்மையா ஒரு கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அதன்பிறகு இரு அணிகளும் கோல் அடிக்காததால் 3-2 என்ற கோல்கணக்கில் இந்தியா வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in