Published : 22 Aug 2022 09:52 PM
Last Updated : 22 Aug 2022 09:52 PM

அடுத்தடுத்து 2 ஒருநாள் தொடர்களில் தொடர் நாயகன் விருதை வென்ற சுப்மன் கில்

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் பேட்ஸ்மேனான சுப்மன் கில், அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு ஒருநாள் தொடர்களில் தொடர் நாயகன் விருதை வென்று அசத்தியுள்ளார். இதன் மூலம் தன்னை இந்திய ஒருநாள் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத பேட்ஸ்மேனாக தகவமைத்துக் கொண்டுள்ளார் அவர்.

22 வயதான கில் கடந்த 2019 வாக்கில் சர்வதேச கிரிக்கெட் களத்தில் அறிமுகமானவர். இதுவரை 9 ஒருநாள் மற்றும் 11 டெஸ்ட் போட்டிகளில் அவர் விளையாடி உள்ளார். மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடரில் சிறப்பான ஆட்டத்தை அவர் வெளிப்படுத்தி இருந்தார்.

இரு நாடுகளுமே வெவ்வேறு விதமான சூழலை கொண்டுள்ளவை. அதற்கு ஏற்றவாறு தன்னை அட்ஜஸ்ட் செய்து கொண்டு அவர் விளையாடினார். அவர் கடைசியாக விளையாடிய 6 ஒருநாள் போட்டிகளில் 64, 43, 98*, 82*, 33 மற்றும் 130 ரன்கள் அடங்கும். (* நாட் அவுட்)

இதில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி 205 ரன்கள் குவித்தார். அந்த தொடரில் அவரது பேட்டிங் சராசரி 102.5. அதன் மூலம் தொடர் நாயகன் விருதை வென்றார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடி 245 ரன்கள் எடுத்துள்ளார். இதில் அவரது பேட்டிங் சராசரி 122.5. இந்த தொடரிலும் தொடர் நாயகன் விருதை அவர் வென்றுள்ளார்.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் தனது ஆதிக்கத்தை அவர் செலுத்தியுள்ளார். எதிர்வரும் 2023 ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் அவருக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x