

வெஸ்டர்ன் அன்ட் சதர்ன் ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் ஒற்றையர் இறுதிச் சுற்றுக்கு செக். குடியரசு வீராங்கனை பெட்ரா குவிட்டோவா முன்னேறியுள்ளார்.
அமெரிக்காவின் ஒஹியோ மாகாணம் மசோன் நகரில் வெஸ்டர்ன் அன்ட் சதர்ன் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் அரை இறுதிச் சுற்றில் அமெரிக்க வீராங்கனை மேடிசன் கீஸும், செக். குடியரசு வீராங்கனை பெட்ரா குவிட்டோவாவும் மோதினர்.
இந்த ஆட்டத்தில் பெட்ரா குவிட்டோவா 6-7, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். முதல் செட்டை மேடிசன் கீஸ் போராடி வென்றார். இருந்தபோதும் அடுத்த 2 செட்களிலும் சுதாரித்து விளையாடிய பெட்ரா எளிதில் வெற்றி பெற்றார். இதையடுத்து அவர் இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இறுதிச் சுற்றில் பெட்ரா குவிட்டோவா, பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியாவை எதிர்த்து விளையாடவுள்ளார். கார்சியா, தரவரிசையில் பின்தங்கிய வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக நடைபெற்ற மற்றொரு அரை இறுதியில் கரோலின் கார்சியா, 6-2,4-6, 6-1 என்ற செட் கணக்கில் பெலாரஸின் அரினா சபலென்காவை வீழ்த்தினார்.